/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் மனு எழுத கூடுதல் வசதி; கலெக்டர் உறுதி
/
குறைதீர் கூட்டத்தில் மனு எழுத கூடுதல் வசதி; கலெக்டர் உறுதி
குறைதீர் கூட்டத்தில் மனு எழுத கூடுதல் வசதி; கலெக்டர் உறுதி
குறைதீர் கூட்டத்தில் மனு எழுத கூடுதல் வசதி; கலெக்டர் உறுதி
ADDED : ஜூலை 08, 2025 01:12 AM
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மனு வழங்க வருவோரில் பெரும்பாலானவர்களுக்கு அதை எழுதி, அதற்கான ஆவணங்களை இணைத்து வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே தனி நபர்கள், மனுக்களை எழுதி வழங்கி, 50 முதல், 200 ரூபாய் வரை கட்டணம் பெறுகின்றனர். இதற்கு மாற்றாக கலெக்டர் அலுவலகத்துக்குள், கலெக்டர் கார் நிறுத்தப்படும் இடத்தில் மகளிர் குழுவினர், சமூக சேவகர்கள் இலவசமாக மனு எழுதி வழங்குகின்றனர்.
நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்த போது, திடீரென வெளியே வந்த கலெக்டர் கந்தசாமி, மனு எழுதி வழங்குவோரிடம் பேசினார். பாராட்டு தெரிவித்த கலெக்டர், 'உங்களுக்கு என்னென்ன சிரமங்கள் உள்ளன. கூடுதலாக என்ன வசதி வேண்டும்' என கேட்டார். அதிக எண்ணிக்கையில் மக்கள் மனு வழங்க வருவதால், எழுதி கொடுக்க கூடுதல் நபர்களை நியமிக்க வேண்டும். மனு எழுதுவோர், மனு வழங்க வருவோர் அமர இருக்கை தேவை என்றனர். விரைவில் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார். அப்போது மனு வழங்க வந்தவர்களிடம் குறை கேட்டார்.
மொடக்குறிச்சி, ஈஞ்சம்பாளையத்தை சேர்ந்த வீரன் மனைவி மல்லிகா, 70, என்பவர், 'தனது கணவர் இறந்து விட்டார். இரு மகள்களும் திருமணமாகி வேறு இடம் சென்று விட்டனர். மகன் இறந்து விட்டதால் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றதுடன், ஆவணங்களை பார்வையிட்டு மனுவை பெற்றுக்கொண்டு, பரிசீலனை செய்வதாக உறுதியளித்து சென்றார்.