/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் பிளாட்பார்ம்; பயணிகள் எதிர்பார்ப்பு
/
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் பிளாட்பார்ம்; பயணிகள் எதிர்பார்ப்பு
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் பிளாட்பார்ம்; பயணிகள் எதிர்பார்ப்பு
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் பிளாட்பார்ம்; பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 08, 2025 05:06 AM
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் பாரத் திட்டத்தில், பல கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணி நடக்கிறது. ஆனால் ஈரோட்டில் நான்கு பிளாட்பார்ம் மட்டுமே உள்ளது. இதில் மூன்று பிளாட்பார்ம்களில் மட்டுமே தொலைதுார ரயில் நிற்கி-றது. நான்காவது பிளாட்பார்மில் பாசஞ்சர் மட்டுமே நிற்கிறது. அதிகளவில் ரயில்கள் வந்து செல்வதால் கூடுதல் பிளாட்பார்ம் அமைக்க நீண்ட நாட்களாகவே கோரிக்கைை இருந்து வருகி-றது.
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது:ஈரோடுக்கு தினமும், 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு ஏற்ப பிளாட்பார்ம் எண்ணிக்கை இல்லை. இதனால் பல ரயில்கள் காவிரி ஆர்.எஸ்.பாலம், ஐ.டி.ஐ., பகுதியில் சிக்னலுக்-காக காத்திருக்க வேண்டியுள்ளது. இதில், 10 முதல் 20 நிமி-டங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது.
சிக்னலுக்காக ரயில்கள் காத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயணிகளிடம் சமூக விரோதிகள் பணம், நகை, மொபைல் போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பறித்தும், திரு-டியும் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் ரயில்வே அதி-காரிகள் கூடுதல் பிளாட்பார்ம் கோரியிருந்தனர்.
ஆனால் பல ஆண்டாக கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மாறாக ரயில்வே அதிகாரிகள் கூடுதல் பிளாட்பார்ம் அமைக்க போதிய இடவசதி இல்லை என்று கூறி வருகின்றனர். இந்நி-லையில் தான் ரயில்வே இன்ஜினியர், மாவட்ட நிர்வாகம் இணைந்து சர்வே மேற்கொண்டதில், மேலும் மூன்று முதல் ஐந்து பிளாட்பார்ம் அமைக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்த அறிக்கை தயார் செய்து மாவட்ட நிர்வாகம், தென்-னக ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பியும், அனு-மதி ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ரயில்வே பொது மேலாளர் அனுமதிக்கும் பட்சத்தில் கூடுதல் பிளாட்பார்ம்கள் அமைத்தால் சர்வதேச தரத்திலான ரயில்வே ஸ்டேஷனாக ஈரோடு மேம்படும். அரசியல் கட்சிகள், அமைப்புகள், வர்த்தக சங்கங்களும் கூட இக்கோரிக்கையை முன் வைத்து வருகின்றன.
இவ்வாறு கூறினர்.

