/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதை ஆசாமிகள் உலா கனி மார்க்கெட்டில் அச்சம்
/
போதை ஆசாமிகள் உலா கனி மார்க்கெட்டில் அச்சம்
ADDED : டிச 08, 2025 05:05 AM
ஈரோடு: ஈரோடு கனி மார்க்கெட்டில் மூன்று தளங்களில், 300க்கும் மேற்-பட்ட கடைகள் உள்ளன. ஆனால் வியாபாரிகளுக்கு பாதுகாப்-பற்ற நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:கனி மார்க்கெட்டில் இரண்டாம், மூன்றாம் தளங்களில் காலியாக உள்ள கடைகள் முன் கஞ்சா, போதை ஊசி போட்டு கொள்ளும் நபர்கள் படுத்து கொள்கின்றனர். சில நேரங்களில் கஞ்சா இழுப்-பது, போதை ஊசி போட்டு கொள்வதும் நடக்கிறது. வியாபா-ரிகள் தட்டி கேட்டால் அடிக்க வருகின்றனர். மேலும் தகாத வார்த்தை பேசுகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கும் கடைகள் முன் ரகளையில் ஈடுபடுகின்றனர். சமூக விரோதிகள் நடமாட்டத்தால், வாடிக்கையாளர் வருகை கேள்விக்குறியாகி வருகிறது. இங்குள்ள அனைத்து கடைகளின் பாதுகாப்புக்கும் ஒரு செக்யூரிட்டி மட்-டுமே உள்ளார். இது போதுமானது இல்லை. இதுகுறித்து மாநக-ராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இங்குள்ள வியாபாரிகள் நிலைமை கவலைக்குரியதாக இருக்கி-றது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

