/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆதி திராவிட விவசாயிகளுக்கு மானியத்தில் நிலம் வாங்க அழைப்பு
/
ஆதி திராவிட விவசாயிகளுக்கு மானியத்தில் நிலம் வாங்க அழைப்பு
ஆதி திராவிட விவசாயிகளுக்கு மானியத்தில் நிலம் வாங்க அழைப்பு
ஆதி திராவிட விவசாயிகளுக்கு மானியத்தில் நிலம் வாங்க அழைப்பு
ADDED : செப் 13, 2024 06:39 AM
ஈரோடு: நிலம் இல்லாத ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை பெருக்க, ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக, நன்னிலம் நில உடைமை திட்டம், தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது.
இதில் நிலமற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பு விவசாய தொழிலாளர்களுக்கு, நிலம் வாங்க சந்தை மதிப்பில், 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ஐந்து லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சம் இரண்டரை ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது ஐந்து ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கி கொள்ளலாம். இந்த நிலங்களுக்கு, 100 சதவீத முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும். மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 18 முதல் 65 வயதுக்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரே நிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், ஆறாவது தளம், கலெக்டர் அலுவலகம், ஈரோடு. 0424-2259453 என்ற எண்ணில் அணுகலாம்.