/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தில்ஆதிசங்கரர் ஜெயந்தி உற்சவ விழா
/
பவானி ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தில்ஆதிசங்கரர் ஜெயந்தி உற்சவ விழா
பவானி ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தில்ஆதிசங்கரர் ஜெயந்தி உற்சவ விழா
பவானி ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தில்ஆதிசங்கரர் ஜெயந்தி உற்சவ விழா
ADDED : மே 03, 2025 01:09 AM
பவானி:பவானி, ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தில், ஆதிசங்கரர் ஜெயந்தி உற்சவ விழா நேற்று நடந்தது.
கடந்த திங்கள் முதல் தினமும் காலை 7:00 முதல் 9:00 மணி வரை வேதபாராயணம், அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், ஆதிசங்கரர் அருளிய ஸ்தோத்திரங்கள், பாராயணம், குரு வந்தனம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்து வந்தது.
முன்னதாக நேற்று காலை, வேதபாராயணம் மற்றும் பஜனை நிகழ்ச்சியுடன் ஸ்ரீ ஆதிசங்கரர் திருவுருவப் படத்துடன், பவானி அக்ரஹார வீதிகளில் திரளான பக்தர்கள் திருவீதி உலா சென்றனர். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
பவானி சங்கரமடத்தின் தர்மாதிகாரி வெங்கட்ராமன், நிர்வாகிகள் காயத்ரிதேவி, விஜயன், சங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.