ADDED : ஜூலை 29, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, ஆடிப்பூர விழாவையொட்டி சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நேற்று மாலை நடந்தது.சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையை தொடர்ந்து, பெரியநாயகி அம்மன் உற்சவர் ஊஞ்சலில் எழுந்தருளினார்.
பூஜையை தொடர்ந்து ஓதுவார் ஆனந்தசாமிகள் பாட்டு பாட ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் அம்மனுக்கு ஊஞ்சல் ஆட்டினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.