/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆதரவற்ற மாணவருக்கு அரசு கல்லுாரியில் அட்மிஷன்
/
ஆதரவற்ற மாணவருக்கு அரசு கல்லுாரியில் அட்மிஷன்
ADDED : ஜூன் 21, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, --நான் முதல்வன் திட்டத்தில், 2024-25ம் கல்வியாண்டில், பிளஸ் ௨ வில் தேர்ச்சி பெற்ற மற்றும் இடைநின்ற மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கும் பொருட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் உயர்கல்வி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், திருப்பூரை சேர்ந்த ஆதரவற்ற மாணவர் உமர் பரூக்குக்கு, நேரடி இரண்டாமாண்டு சேர்க்கையில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பாடப்பிரிவில் சேர்க்கை வழங்கப்பட்டது.