/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., ஆண்டு விழா கோபியில் பொதுக்கூட்டம்
/
அ.தி.மு.க., ஆண்டு விழா கோபியில் பொதுக்கூட்டம்
ADDED : நவ 17, 2024 01:52 AM
கோபி, நவ. 17-
அ.தி.மு.க.,வின், 53வது ஆண்டு விழா பொதுக்கூட்டம், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில், கோபியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தில் வரும், 2026ல், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தற்போது இந்த ஆட்சியில் திறப்பு விழா கண்டு வருகிறது. அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை, நாம் முதலில் கொண்டு வந்தோம். ஆனால் அந்த திட்டம் தற்போது முடங்கியுள்ளது.
இவ்வாறு பேசினார்.
கோபி நகர செயலர் பிரினியோ கணேஷ், ஒன்றிய செயலர்கள் குறிஞ்சிநாதன், தம்பி சுப்பிரமணியம், கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

