/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சமையல் எண்ணெய்களில் கலப்படம் நுகர்வோர் அமைப்பு கூட்டத்தில் கவலை
/
சமையல் எண்ணெய்களில் கலப்படம் நுகர்வோர் அமைப்பு கூட்டத்தில் கவலை
சமையல் எண்ணெய்களில் கலப்படம் நுகர்வோர் அமைப்பு கூட்டத்தில் கவலை
சமையல் எண்ணெய்களில் கலப்படம் நுகர்வோர் அமைப்பு கூட்டத்தில் கவலை
ADDED : அக் 31, 2024 06:19 AM
ஈரோடு: சமையல் எண்ணெய்களில், கலப்படம் அதிகம் உள்ளதால் அதை கண்டறிந்து, கூடுதல் மாதி-ரிகள் எடுத்து பரிசோதிக்க வேண்டும் என, நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு பொதுக்குழு மற்றும் உலக உணவு தினவிழா ஈரோட்டில், தலைவர் மயிலானந்தம் தலை-மையில் நடந்தது. துணைத் தலைவர் கோபி ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பொருளாளர் சாலைமணி கணக்கு சமர்ப்பித்தார். செயலாளர் பாலசுப்பிரமணியன் தீர்மானங்களை வாசித்தார்.
புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி மாநில, மாவட்ட அளவில் நுகர்வோர் பாதுகாப்பு ஆணை-யங்களை அமைக்க வேண்டும். பொது வினி-யோக திட்டத்தில், இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் எண்ணெய் விற்பனையை நிறுத்தி-விட்டு, தேங்காய் எண்ணெய் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமையல் எண்ணெய்களில் கலப்படம் தற்போது அதிகம் உள்ளதால் அதை கண்டறிந்து, கூடுதல் மாதிரி எடுத்து பரிசோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன. உலக உணவு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. துணை தலைவர் மல்லிகா, இணை செயலாளர் மெய்யப்பன், மாவட்ட உழவர் விவாதக்குழு செயலாளர் வெங்கடாசலபதி உட்பட பலர் பங்-கேற்றனர். இணை செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

