/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின் கம்பங்களில் ஒயரை அகற்றிக் கொள்ள அறிவுரை
/
மின் கம்பங்களில் ஒயரை அகற்றிக் கொள்ள அறிவுரை
ADDED : ஜூலை 03, 2024 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சி பகுதியில், பெரும்பாலான இடங்களில், மாநகராட்சி
தெருவிளக்கு மின் கம்பங்களில், முறையான அனுமதியின்றி, தனியார்
நிறுவனங்கள் இன்டர்நெட் கேபிள் மற்றும் ஒயர்களை கட்டியுள்ளன. இவை பல
இடங்களில் அறுந்து விழுவதால் வாகன விபத்து ஏற்படுவதாக
மாநகராட்சிக்கு புகார்கள் சென்றன.
இந்நிலையில் அனுமதியின்றி
மாநகராட்சி மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள இன்டர்நெட் கேபிள்
மற்றும் ஒயர்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், இந்த அறிவிப்பு
வெளியான ஏழு நாள்களுக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில்
மாநகராட்சி சார்பில் அகற்றப்படும். இத்தகவலை மாநகராட்சி
நிர்வாகம் தெரிவித்துள்ளது.