/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்க அறிவுரை
/
பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்க அறிவுரை
ADDED : டிச 19, 2025 07:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கலெக்டர் கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு செயல்படுகிறது.
இங்கிருந்து முறையாக இயக்கப்படாத பஸ்கள் மீது, போலீஸ், போக்குவரத்து துறை, வட்டார போக்குவரத்து துறை மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் உரிமையாளர்கள் முறையாக இயக்கப்பட அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த வழித்தடம் மார்க்கமாக செல்லும் மக்கள், ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று வர இணைப்பு பஸ்கள் உள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

