/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் புறக்கணிப்பு பேனரால் பரபரப்பு
/
தேர்தல் புறக்கணிப்பு பேனரால் பரபரப்பு
ADDED : ஏப் 08, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: திருப்பூர் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் அருணாச்சலம் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அந்தியூர் அருகே நல்லாமூப்பனூரில், இவரை கண்டித்தும், தேர்தலை புறக்கணிக்கப்போவதாக, சிலர் பேனர் வைத்தனர். அதில் அந்தியூர் ஒன்றியம், வேம்பத்தி ஊராட்சி, நல்லாமூப்பனுார் கிளை கழகம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையறிந்த அ.தி.மு.க., அந்தியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நாராயணன் பேனரை அப்புறப்படுத்தினார். இதை வைத்தது யார்? என்றும் அக்கட்சியினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

