/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாக்கு மரத்தில் செம்பேன் தாக்குதல் வேளாண் அலுவலர்கள் அறிவுரை
/
பாக்கு மரத்தில் செம்பேன் தாக்குதல் வேளாண் அலுவலர்கள் அறிவுரை
பாக்கு மரத்தில் செம்பேன் தாக்குதல் வேளாண் அலுவலர்கள் அறிவுரை
பாக்கு மரத்தில் செம்பேன் தாக்குதல் வேளாண் அலுவலர்கள் அறிவுரை
ADDED : டிச 27, 2025 07:53 AM
ஈரோடு: பாக்கு மரங்களில் செம்பேன் பூச்சி தாக்குதலை, சரியான நேரத்தில் கண்டறிவது அவசியம். தாக்குதலின் ஆரம்ப நிலை அறிகுறியாக, இலைகளின் மேற்பரப்பில் சிறிய மஞ்சள் புள்-ளிகள் காணப்படும். இலையின் ஒளிர்வு தன்மை குறையும். நடு நிலை அறிகுறிகளாக மஞ்சள் புள்ளிகள் இணைந்து, வெண்கலம் அல்லது சிவப்பு, பழுப்பு நிறமாக மாறி, இலைகள் தீயில் எரிந்-தது போல காணப்படும். இலைகளின் அடிப்புறம் மெலிந்து வலைப்பின்னல் போல காட்சியளிக்கும்.
அடுத்த கட்டமாக கடுமையான அறிகுறியாக, இலையின் ஓரங்கள், முனைகள் உலர்ந்து, சுருங்கி காணப்படும். அவை உடைந்து விழும் நிலை ஏற்படும். இதனால் ஒளிச்சேர்க்கை குறைவு ஏற்பட்டு, மரங்களின் வளர்ச்சி குறையும். பாக்குகளின் அளவு குறைந்து, சில நேரங்களில் காய்கள் உதிர்ந்தும் விடும்.
இந்நோய் நீண்ட காலம் தாக்கி இருந்தால், மரங்கள் பலவீன-மாகும். அப்போது, 15 முதல், 40 சதவீதம் வரை மகசூல் பாதிக்கும். இதை தவிர்க்க ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்-மையை பின்பற்ற வேண்டும். ஒரே மருந்தை தொடர்ந்து பயன்ப-டுத்தக்கூடாது. கூடுதல் தகவல் மற்றும் பாதுகாப்பு வழிமுறை-களை, அருகில் உள்ள வேளாண்மை மையத்தில் விவசாயிகள் பெறலாம்.
இத்தகவலை வேளாண் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

