/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிற்சாலைக்கு அனுப்ப முயன்ற வேளாண் யூரியா 19 டன் பறிமுதல்
/
தொழிற்சாலைக்கு அனுப்ப முயன்ற வேளாண் யூரியா 19 டன் பறிமுதல்
தொழிற்சாலைக்கு அனுப்ப முயன்ற வேளாண் யூரியா 19 டன் பறிமுதல்
தொழிற்சாலைக்கு அனுப்ப முயன்ற வேளாண் யூரியா 19 டன் பறிமுதல்
ADDED : பிப் 16, 2025 04:01 AM
ஈரோடு: ஈரோடு அருகே விவசாயத்துக்கு மானிய விலையில் வழங்கப்-படும் யூரியாவை, தொழிற்சாலை பயன்பாட்டுக்கு அனுப்ப முயன்ற புகாரில், 19 டன் யூரியாவை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு அடுத்த சித்தோட்டில் இருந்து பேரோடு வழியாக காஞ்சி-கோவில் செல்லும் சாலையில் சி.மேட்டுப்பாளையம் உள்ளது.
இங்கு ஜெயகுமார் என்பவருக்கு சொந்தமான இரு குடோன் உள்ளது. பவானி லட்சுமி நகரை சேர்ந்த அகமது அலி, தன்னாசி வாடகைக்கு எடுத்து, விவசாயத்துக்கான உரங்களை ஸ்டாக் வைத்து, கடைகளுக்கு அனுப்பும் உரிமம் பெற்றுள்ளனர்.
இதில் ஒரு குடோனில் விவசாய பயன்பாட்டுக்கான யூரியாவை, தொழிற்சாலை பயன்பாட்டுக்கு அனுப்ப முயன்றதாக வேளாண் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி உள்ளிட்ட வேளாண் துறை-யினர், 19 டன் யூரியாவை பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது: வேளாண் பயன்பாட்டுக்-கான யூரியாவை, அந்தந்த மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்து, அம்-மாவட்டத்தில் மட்டுமே பயன்
படுத்த வேண்டும்.
பக்கத்து மாவட்டத்துக்கு கூட எடுத்து செல்லக்கூடாது. சித்தோடு அருகே உள்ள குடோனில், 70 டன் வரை விவசாயத்துக்கான யூரியா இருந்தது.
அதில் மற்றொரு குடோனில் வைத்து, இந்த யூரியாவை பிரித்து, தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சாக்கில் மாற்றி, கேரளாவுக்கு அனுப்புவதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட, 19 டன் யூரியாவை மட்டும் பறிமுதல் செய்துள்ளோம். சித்தோடு போலீஸில் வேளாண் துறை மூலம் புகார் செய்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கூறினர்.

