/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'பச்சைப்பயறு' விதை நேர்த்தி வேளாண்துறை ஆலோசனை
/
'பச்சைப்பயறு' விதை நேர்த்தி வேளாண்துறை ஆலோசனை
ADDED : டிச 03, 2024 07:27 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா மகேஸ்-வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பச்சைப்பயிரில் விதை நேர்த்தி செய்து விதைப்பது அவசியம். ஒரு
கிலோ விதைக்கு, 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி
அல்-லது, 10 கிராம் சூடோமோனஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை
நேர்த்தி செய்ய, 200 கிராம் பாக்கெட் ரைசோ-பியம் மற்றும் 200 கிராம் பாக்கெட் பாஸ்போ
பாக்டீரியா, ஒரு பாக்கெட் தமிழக வேளாண்மை பல்கலை தயாரித்த பி.ஜி.பி.ஆர்.-ஐ.,
அரிசிக் கஞ்சியுடன் கலந்து உபயோகிக்கவும். விதை நேர்த்தி
செய்யவில்லையென்றால் பாஸ்போ பாக்டீரியா, 10 பாக்கெட் மற்றும் 10 பாக்கெட்
தமிழக வேளாண்மை பல்கலை தயாரித்த பி.ஜி.பி.ஆர்-.ஐ., 25 கிலோ தொழுவுரம் மற்றும்
25 கிலோ மணலில் கலந்து விதைக்கவும்.