/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி 2ம் போக சாகுபடிக்கு வேளாண் துறை யோசனை
/
கீழ்பவானி 2ம் போக சாகுபடிக்கு வேளாண் துறை யோசனை
ADDED : ஜன 16, 2025 06:28 AM
ஈரோடு: கீழ்பவானி, இரண்டாம் போக பாசன பகுதி விவசாயிகள் நிலக்கடலை, எள், மக்காசோளம், பயறு வகைகள், சிறு தானியங்கள் சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெறலாம் என, சென்னிமலை வேளாண் உதவி இயக்குனர் சாமுவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி பாசனப்பகுதி, இரண்டாம் போக புஞ்சை பாசனத்துக்கு கடந்த, 10ல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நிலக்கடலை, எள், மக்காசோளம், பயறு வகைகள், இதர சிறுதானியங்கள் சாகுபடி செய்து பயன் பெறலாம். நிலக்கடலை சாகுபடி செய்யும்போது கண்டிப்பாக, உளுந்து, தட்டை பயறு போன்ற பயறு வகைகளை ஊடுபயிராக சாகுபடி செய்வதால், நிலக்கடலை பயிரில் பூச்சி தாக்குதலை குறைப்பதுடன், கூடுதல் வருமானம் பெற இயலும். விவசாயிகளுக்கு தேவையான மக்காசோளம், கம்பு, சோளம், உளுந்து, நிலக்கடலை, எள் போன்றவற்றின் விதைகள் மானிய விலையில் தற்போது வேளாண் விரிாவக்க மையத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சம்பா நெல் அறுவடை முடிந்ததும், விவசாயிகள் அந்த ஈரப்பதத்தை பயன்படுத்தி பயறு வகைகள் பயிரிடுவதால் மண் வளம் பெறும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.