/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதல்வர் பங்கேற்கும் கண்காட்சி வேளாண் செயலர் ஆலோசனை
/
முதல்வர் பங்கேற்கும் கண்காட்சி வேளாண் செயலர் ஆலோசனை
முதல்வர் பங்கேற்கும் கண்காட்சி வேளாண் செயலர் ஆலோசனை
முதல்வர் பங்கேற்கும் கண்காட்சி வேளாண் செயலர் ஆலோசனை
ADDED : ஜூன் 01, 2025 01:22 AM
ஈரோடு, பெருந்துறை சுங்கச்சாவடி அருகே வரும், 11, 12ல் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடக்க உள்ள கண்காட்சி, கருத்தரங்கு முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நேற்று நடந்தது. இதில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் தட்சிணாமூர்த்தி பேசியதாவது:
இரு நாட்கள் நடக்கும் கண்காட்சியில், 10 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் என, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர், உணவு, அமர நாற்காலி, கழிவறை, வாகன நிறுத்தம், தீயணைப்பு வசதி, மருத்துவ முகாம், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 200க்கும் மேற்பட்ட அரங்கு அமைக்கப்படுகிறது. இவ்வாறு பேசினார். முன்னதாக கண்காட்சி திடலை ஆய்வு செய்து, முன்னேற்பாடுகளை கவனித்தனர்.