/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு
/
ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு
ADDED : அக் 10, 2024 03:11 AM
புன்செய் புளியம்பட்டி: ஆயுத பூஜையை முன்னிட்டு, பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் சுற்றுவட்டாரங்களில், 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மல்லி, முல்லை மற்றும் சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள், புன்செய்புளியம்பட்டி மார்க்கெட் கொண்டு வரப்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிக-ளுக்கும், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்ப-டுகிறது.
கடந்த சில நாட்களாக, சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில், மழை என, பருவநிலை மாறியுள்ளது. இதனால், மல்-லிகை பூ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு விலை கணிசமான அளவில் உயரத்து-வங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி பூ, நேற்று, 260 ரூபாய்க்கு விற்பனை-யானது. ரூ.90க்கு விற்ற செவ்வந்தி, 280 ரூபாய், 500க்கு விற்ற மல்லி, 840 ரூபாய்க்கு விற்றது.