ADDED : ஜூன் 13, 2026 03:51 AM

சென்னிமலை:சென்னிமலை யூனியன், ஈரோடு மேற்கு, பெருந்துறை, காங்கேயம் என மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்டதாக உள்ளது.
இந்நிலையில் காங்கேயம் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
நடராஜ், சென்னிமலை டவுன் பஞ்., அலுவலகத்தில் தனது முதல் ஆய்வு
கூட்டத்தை நேற்று நடத்தினார். டவுன் பஞ்சாயத்து மற்றும் காங்கேயம்
தொகுதிக்கு உட்பட்ட, 12 கிராம ஊராட்சி செயலாளர், அனைத்து துறை
அதிகாரிகள் கலந்து கொண்டனர். குடிநீர் பிரச்னை, சாலை வசதி, ரேசன் கடை உள்ளிட்ட வளர்ச்சி பணி குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் செயல் அலுவலர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், சென்னி
மலை டவுன் பஞ்., தலைவர் ஸ்ரீதேவி அசோக், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கோபால
கிருஷ்ணன்,
தங்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர். சென்னிமலை நகரில்
இரண்டாண்டுகளுக்கு மேல் நடந்து வரும் அம்ரூத் திட்ட குடிநீர் குழாய்
பதிக்கும் பணியை விரைந்து முடிக்கவும், நகர பகுதிகளில் சேதமடைந்த
தார்ச்சாலைகளை புதியதாக போடவும் வலியுறுத்தப்பட்டது.
