தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிநீர் கேட்டு மறியல்; அரசு பஸ் சிறைபிடிப்பு

குடிநீர் கேட்டு மறியல்; அரசு பஸ் சிறைபிடிப்பு

குடிநீர் கேட்டு மறியல்; அரசு பஸ் சிறைபிடிப்பு


ADDED : ஜூன் 13, 2026 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 03:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னிமலை:சென்னிமலை யூனியன் வாய்பாடி ஊராட்சி சுள்ளிமேடு பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குறைந்த நேரமே குடிநீர் வழங்கப்படுகிறது.

தினமும் குடிநீர் வழங்குமாறு, ஊராட்சி செயலாளரிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

இந்நிலையில் வாய்பாடி- விஜயமங்கலம் ரோட்டில், காலி குடங்களுடன் அரசு பஸ்சை சிறைபிடித்து, நேற்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னிமலை போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினர். தினமும் குடிநீர் வழங்க ஆவண செய்வதாக வாக்குறுதி கொடுக்கவே மறியலை கைவிட்டனர். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லுாரி செல்லும் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us