/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறையில் அ.தி.மு.க.,மே தின பொதுக் கூட்டம்
/
பெருந்துறையில் அ.தி.மு.க.,மே தின பொதுக் கூட்டம்
ADDED : மே 03, 2025 01:06 AM
பெருந்துறை:அ.தி.மு.க., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், அண்ணா தொழிற் சங்க பேரவை சார்பில், பெருந்துறை வடக்கு ஒன்றியம் ஏற்பாட்டில், மே தின விழா பொதுக்கூட்டம், பெருந்துறை பங்களா வீதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
பெருந்துறை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரஞ்சித் ராஜ், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் ஜான் ஆகியோர் தலைமை வகித்தனர். பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் வரவேற்றார். கூட்டத்தில், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கருப்பணன், கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்தன், தலைமை பேச்சாளர் தாராபுரம் முத்து மணிவேல், அனைத்து உலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் ஜெகதீஷ் உட்பட பலர் பேசினர்.
பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுதுரை, பெருந்துறை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், நகர செயலாளர்கள் பழனிச்சாமி, கல்யாணசுந்தரம், சிவசுப்பிரமணியம், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் அருணாச்சலம், பெருந்துறை யூனியன் முன்னாள் சேர்மன் சாந்தி ஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.