/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரவணைக்கப்பட்ட அ.தி.மு.க., நிர்வாகி; தி.மு.க., பிரசாரத்தில் மீண்டும் சர்ச்சை
/
அரவணைக்கப்பட்ட அ.தி.மு.க., நிர்வாகி; தி.மு.க., பிரசாரத்தில் மீண்டும் சர்ச்சை
அரவணைக்கப்பட்ட அ.தி.மு.க., நிர்வாகி; தி.மு.க., பிரசாரத்தில் மீண்டும் சர்ச்சை
அரவணைக்கப்பட்ட அ.தி.மு.க., நிர்வாகி; தி.மு.க., பிரசாரத்தில் மீண்டும் சர்ச்சை
ADDED : ஜன 28, 2025 07:27 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., போட்டியிடாததால், அக்கட்சியினர் முற்றிலும் விலகி காணப்படுகின்றனர். ஆனாலும் அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு சென்று அமைச்சரான வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, பிரசாரத்தில் செல்லும் இடங்களில் அ.தி.மு.க., நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்றும், சந்திக்கும் நிர்வாகிகளிடம் தங்களுக்கு ஓட்டளிக்க வலியுறுத்துகிறார்.
இந்நிலையில் மாநகராட்சி, 42வது வார்டு, மரப்பாலம் பகுதி, வளையக்கார வீதியில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் வேட்பாளர் சந்திரகுமார், மாநகராட்சி மண்டல தலைவர் தண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று ஓட்டு சேகரித்தனர். அப்போது அ.தி.மு.க., மரப்பாலம் பகுதி செயலாளர் கூளக்கவுண்டர் என்ற சுப்பிரமணியத்தையும் அணைத்து சிறிது துாரம் அழைத்து சென்றனர். கூட்டத்தில் இருந்தவர்கள் கலகலப்பாக பேசி, போட்டோவும் எடுத்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கூளக்கவுண்டர் என்ற சுப்பிரமணியம் கூறியதாவது: அமைச்சர் முத்துசாமி சாலையில் பிரசாரம் செய்து கொண்டு வந்தார். என்னை பார்த்ததும் பேசினார். நான் அந்த பகுதியை சேர்ந்தவன். என்னை பார்த்துவிட்டு பார்க்காமல் போக முடியுமா அதை படம் எடுத்து போட்டுள்ளனர். நான் எப்போதும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., தொண்டன்தான். இவ்வாறு கூறினார்.

