ADDED : ஆக 11, 2025 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,: அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின், ஈரோடு மவட்ட செயலாளர் மற்றும் புதிய கொடி அறிமுக கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. அவைத்தலைவர் தாஜூதீன் தலைமை வகித்தார்.
கட்சியின் பொருளாளர் மாரி முன்னிலை வகித்தார். ஈரோடு மாவட்ட செயலாளர் இதயதுல்லா வரவேற்றார். கட்சி பொது செயலாளர் பசும்பொன் பாண்டியன், கொடியை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.