/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பிறந்த நாள் விழா
/
அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பிறந்த நாள் விழா
அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பிறந்த நாள் விழா
அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பிறந்த நாள் விழா
ADDED : மே 13, 2025 01:44 AM
பெருந்துறை, :அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமியின், 71-வது பிறந்த நாள் விழாவையொட்டியும், எல்லையில் போர் புரியும் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும், வெற்றி பெறவும், அ.தி.மு.க., பெருந்துறை கிழக்கு ஒன்றியம் சார்பில், பெருந்துறை சோளீஸ்வரர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை, ௧,௦௦௦ பேருக்கு அன்னதானம், நீர்மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள் ஜோதி செல்வராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கருப்பணன், அன்னதானத்தை துவக்கி வைத்தார். பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட் அருகில், நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கினார். நிகழ்ச்சியில் பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித்ராஜ், நகர செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியம், துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.பழனிசாமி பிறந்த நாளான நேற்று, பெருந்துறை சட்டசபை தொகுதியில், அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க நாணயத்தை, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் அருணாச்சலம் வழங்குகிறார்.