/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி வார்டு சிறப்பு கூட்டம்: புறக்கணிப்பதாக அ.தி.மு.க., மனு
/
மாநகராட்சி வார்டு சிறப்பு கூட்டம்: புறக்கணிப்பதாக அ.தி.மு.க., மனு
மாநகராட்சி வார்டு சிறப்பு கூட்டம்: புறக்கணிப்பதாக அ.தி.மு.க., மனு
மாநகராட்சி வார்டு சிறப்பு கூட்டம்: புறக்கணிப்பதாக அ.தி.மு.க., மனு
ADDED : அக் 28, 2025 01:43 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி சேவை தொடர்பாக, மக்களிடம் மனுக்கள் பெறும் வகையில் மூன்று நாட்கள் வார்டு வாரியான சிறப்பு கூட்டம் நேற்று தொடங்கியது.
இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் அர்பித் ஜெயினிடம், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மனு அளித்தனர். மனு விபரம்: மாநகராட்சி, 31வது வார்டுக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி சாலை, பாவடி வீதி, பட்டேல் வீதிகளில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் சப்ளை இல்லை. இதுகுறித்து ஆறு மாதமாக முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதேபோல், ௧5 வது வார்டு, 54வது பகுதிகளில் மக்கள் பிரச்னைகளை பலமுறை சுட்டிக்காட்டியும் பல ஆண்டுகளாக தீர்வில்லை. இதனால் அ.தி.மு.க., வார்டுகளில் நடக்கும் சிறப்பு கூட்டத்தை புறக்கணிக்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.