/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பூம்புகாரில் ஐம்பொன் நகை கண்காட்சி துவக்கம்
/
பூம்புகாரில் ஐம்பொன் நகை கண்காட்சி துவக்கம்
ADDED : அக் 19, 2024 01:20 AM
பூம்புகாரில் ஐம்பொன்
நகை கண்காட்சி துவக்கம்
ஈரோடு, அக். 19-
ஈரோடு, அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே, மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஐம்பொன்னாலான நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது.
ஐம்பொன் வளையல், சங்கு வளையல், செயின், நெக்லஸ், கொலுசு, கம்மல், முத்து மற்றும் பவள பாசிகள், இயற்கை கற்களாலான நகைகள், ராசிக்கல் மோதிரம், பஞ்சலோக மற்றும் நவரத்தின மோதிர வகைகள், ருத்ராட்சம், துளசி, ஸ்படிகம், கருங்காலி மாலைகள், பிரேஸ்லெட், டாலர்கள் உட்பட பல்வேறு வகை நகைகள் விற்பனைக்கு உள்ளன. இவை, நேபாளம், குஜராத் மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செய்யப்படும் நகைகள் என்று, மேலாளர் அருண் தெரிவித்தார்.

