ADDED : நவ 02, 2024 01:03 AM
ஈரோடு, நவ. 2-
ஐப்பசி மாத அமாவாசையான நேற்று, ஈரோட்டில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அசோகபுரம் மழை மாரியம்மன், முத்தம்பாளையம் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.
கொங்கலம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில், கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவில், கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில், -சத்தி ரோட்டில் உள்ள எல்லை மாரியம்மன் கோவில், சூரம்பட்டி பகுதியில் உள்ள மகாளியம்மன் கோவில் உள்பட மாநகரின் பல்வேறு கோவில்களில் ஐப்பசி மாத அமாவாசை வழிபாடு களை கட்டியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், சிங்கார வீதி அங்காளம்மன் கோவில், தவிட்டுப்பாளையம் சவுடேஸ்வரியம்மன் கோவில், மலைக்கருப்புச்சாமி கோவில், புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவில், கைகாட்டி ஆஞ்சநேயர் கோவில், கீழ்வாணி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் அமாவாசை வழிபாடு நடந்தது.