ADDED : ஜூலை 17, 2026 06:19 AM
ஈரோடு:ஏ.ஐ.டி.யு.சி.,
மண்டல அளவிலான சிறப்பு கூட்டம் ஈரோட்டில், மாநில செயலர் சின்னசாமி
தலைமையில் நடந்தது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம்,
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., தலைவர்கள், செயலர்கள்
பங்கேற்றனர்.
மாநில தலைவர் காசி விஸ்வநாதன் துவக்கி வைத்தார். தேசிய
துணை தலைவர் எம்.பி., கே.சுப்பராயன், மாநில செயலர்கள் சேகர், செல்வராஜ்,
துளசிமணி உட்பட பலர் பேசினர்.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத
தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தனியார் மயம், பங்கு விற்பனை,
கான்ட்ராக்ட், அவுட் சோர்சிங் முறைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட
பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.
இவற்றை வலியுறுத்தி வரும், 29ல்
டில்லியில் நடக்கும் தேசிய மாநாட்டில் பங்கேற்பது. மாநிலத்தில் தேங்கி
கிடக்கும் பிரச்னைகளுக்கு, முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு தீர்வு
காணவும் வேண்டுகோள் விடுத்தனர்.
