தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சபரிமலையில் வசதி சேவா சங்கம் வலியுறுத்தல்

சபரிமலையில் வசதி சேவா சங்கம் வலியுறுத்தல்

சபரிமலையில் வசதி சேவா சங்கம் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 17, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாநில அமைப்பின் தலைவர் விஸ்வநாதன், செயலர் ஐயப்பன் ஆகியோர், ஈரோட்டில் விடுத்த செய்திக்குறிப்பில் கூறியதாவது:

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழக பக்தர்கள் அதிகமாக செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதில்லை என்ற குறைகள் உள்ளன. தமிழக அரசு, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மூலம் தேவையான உதவிகளை செய்து தர வேண்டும்.

எங்கள் சங்கம், 30 ஆண்டாக சபரிமலை சன்னிதானம், பம்பா, கரிமலை, பெரியானை வட்டம் ஆகிய இடங்களில் அன்னதானம், ஸ்டெச்சர் சேவைகள், மூலிகை குடிநீர் வழங்கல் செய்து வருகிறது. இரு ஆண்டாக கேரள அரசின் சில தடைகளால் நிலக்கல், பம்பா, சன்னிதானம் பகுதிகளில் சேவை செய்ய இயலவில்லை. எனவே தமிழக அரசு, தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு தங்கும் வசதி, அன்னதானம் செய்து கொடுக்க, கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்றால், நாங்கள் சபரிமலை சீசன் முழுமையிலும் சேவை செய்ய தயாராக உள்ளோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us