/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் அருகே அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரம் களிமண் கிடைப்பது சிரமமாக உள்ளதாக வருத்தம்

ADDED : நவ 23, 2024 03:09 AM
காங்கேயம்: கார்த்திகை தீப திருநாள் டிச.,௧௩ம் தேதி கொண்டாடப்படுகி-றது. இதையொட்டி அகல் விளக்குகளில் மக்கள் விளக்கேற்றி வழிபடுவர். இதை குறிவைத்து காங்கேயம், சம்பந்தம்பாளை-யத்தில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர், அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்-ளனர்.
இதுகுறித்து மண்பாண்ட கைவினை கலைஞர் சிவக்குமார் கூறி-யதாவது;நாங்கள் ஐந்தாம் தலைமுறையாக மண்பாண்ட தொழிலில் ஈடு-பட்டு வருகிறோம். வண்டல் மண்ணுடன் செம்மண், காற்று மண் கலந்து பிசைந்து உருவாக்கி வருகிறோம்.
நாளொன்றுக்கு ஆயிரம் அகல் விளக்கு வரை தயாரித்து வரு-கிறோம். இதில் சாதாரண விளக்கு, பஞ்சமுக அகல் விளக்கு, கோவில்களில் ஏற்றப்படும் பெரிய அளவிலான விளக்குகள் என பல்வேறு வகையில் தயாரித்து வருகிறோம். காங்கேயம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விளக்குகளை, விற்பனை செய்து வரு-கிறோம்.
இந்த சீசனில் மட்டும், 3 லட்சம் விளக்குகளுக்கு மேல் சப்ளை செய
்வோம். ஆனால், களிமண் போதிய அளவில் கிடைப்ப-தில்லை. அப்படியே கிடைத்தாலும் கொண்டு வருவதற்கு பல கெடுபிடி உள்ளது.
அடையாள அட்டையை காண்பித்தால் எங்கிருந்து வேண்டுமா-னலும் களிமண் கொண்டு வர அரசு அனுமதிக்க வேண்டும். இந்த ஆண்டு குறைந்த அளவில் மண் கிடைத்ததால், உற்பத்-தியும் குறைந்தது.
இதனால் ஒரு லட்சம் அகல் விளக்குகள் மட்டும் தயாரிக்க முடிந்துள்ளது. மக்கள் அனைவரும் களிமண்ணால் கையால் செய்த விளக்குகளை வாங்கி பயன்படுத்தினால், ஏழை மண்-பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெறுவர்.
இவ்வாறு கூறினார்.