/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
5 குழந்தைகளின் தந்தை உயிரை பறித்த 'மது'
/
5 குழந்தைகளின் தந்தை உயிரை பறித்த 'மது'
ADDED : நவ 09, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, நவ. 9-
குடிபோதை பழக்கத்தால், ஐந்து குழந்தைகளின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு, கருங்கல்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 35; இவரின் மனைவி துர்காலட்சுமி, 35; தம்பதிக்கு நான்கு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.
மாட்டு வண்டி ஓட்டும் தொழில் செய்து வந்த ஜெயபிரகாஷுக்கு, மது குடிக்கும் பழக்கம் உண்டு. வருவாயை மது குடித்துவிட்டு, வீட்டில் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.