/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எய்ட்ஸ் தடுப்பு-கட்டுப்பாடு அனைத்து துறை ஆலோசனை
/
எய்ட்ஸ் தடுப்பு-கட்டுப்பாடு அனைத்து துறை ஆலோசனை
ADDED : பிப் 07, 2026 04:37 AM
ஈரோடு: எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். எச்.ஐ.வி., - எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குழந்-தைகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் திட்டங்களில் முன்னு-ரிமை வழங்க யோசனை தெரிவிக்கப்பட்டது.
அவர்களது குழந்-தைகளுக்கும், பெற்றோரால் பாதிக்கப்பட்ட, கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி, ஊட்டச்சத்து ஆதரவு நிதி மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதை பெற்றுத்தர வேண்டும். கூட்டு மருந்து சிகிச்சை பெறும் பயனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ், உழவர் பாதுகாப்பு திட்டத்தில் மாதம், 1,000 ரூபாய் ஓய்வூதிய தொகை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு சமூக நலத்திட்-டங்கள் கிடைக்க உதவ கேட்டு கொண்டனர்.இணை இயக்குனர் (நலப்பணிகள்) ஜெயந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, மாவட்ட திட்ட மேலாளர் (எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு) துரைசாமி உட்பட பலர் பங்கேற்-றனர்.

