/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் காத்திருப்பு போராட்டம் துவக்கம்
/
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் காத்திருப்பு போராட்டம் துவக்கம்
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் காத்திருப்பு போராட்டம் துவக்கம்
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் காத்திருப்பு போராட்டம் துவக்கம்
ADDED : பிப் 07, 2026 04:37 AM

ஈரோடு: தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், காத்திருப்பு போராட்டத்தை நேற்று துவங்கினர்.
சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, 60,000 பணியிடங்-களை நிரப்ப வேண்டும். அரசு துறைகளில் பணி மூப்பு அடிப்ப-டையில் சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு, 6,750 ரூபாய் அகவி-லைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 12 மாதம் மகப்-பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தினர். கடந்த, 3ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மறியலில் ஈடுபட்டனர். நேற்று முதல் காத்தி-ருப்பு போராட்டமாக மாற்றி உள்ளனர். மாவட்ட அளவில் சத்து-ணவு, அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்துக்கு வந்ததால், பந்தல் அமைத்து, 600க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர். மாவட்ட தலைவர் தனுஷ்கோடி, நிர்வாகிகள் வெங்கிடு, சாமி-குணம், உஷாராணி, பழனிசாமி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.