ADDED : நவ 27, 2024 12:51 AM
அனைத்து துறை ஓய்வூதியர் தர்ணா
ஈரோடு, நவ. 27-
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சங்கரன் தலைமையில், ஈரோடு, தாலுகா அலுவலக வளாகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில துணை பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்து பேசினர். நிர்வாகிகள் சீனிவாசன், ஹரிதாஸ், பிரசன்னா, கதிர்வேல், ராஜ்குமார் உட்பட பலர் பேசினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக, 10 சதவீதம் ஒய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட நடைமுறையை எளிமையாக்க வேண்டும். கமுடேஷன் பிடித்தம் செய்யும் காலத்தை, 15 ஆண்டுகளில் இருந்து, 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.