ADDED : ஆக 22, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தொழிற்சங்கங்கள், பொது அமைப்பு நிர்வாகிகள் கூட்டம் சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஈரோட்டில் நடந்தது.
மத்திய அரசின் புதிய வி.பி.ஜி.ராம்ஜி திட்டத்தை கைவிட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மீண்டும் அமலாக்க வேண்டும். தேசிய அளவில் பெருகும் வேலையின்மையை போக்க வேண்டும். கான்ட்ராக்ட், அவுட் சோர்சிங், அப்ரண்டீஸ் போன்ற பெயரிலான உழைப்பை சுரண்டுவதை தடுக்க வேண்டும். கல்வி வணிக மயமாவதை தடுக்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும், 25ம் தேதி மாலை, 4:30 மணிக்கு வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த
தீர்மானம் நிறைவேற்றினர்.
