/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனுமதி பெறாத பா.ம.க., பிளக்ஸ் பேனர் மாநகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

ADDED : மே 13, 2025 01:40 AM
ஈரோடு :ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அனுமதி பெறாமல் பொது இடங்களில் பேனர் வைப்பது அதிகரித்துள்ளது. இதை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்று குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடர்பான பிளக்ஸ் பேனர், ஈரோட்டில் வ.உ.சி., பூங்கா நுழைவுவாயில் முன் கடந்த, 10ல் வைக்கப்பட்டது. பேனரை வைக்க மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அனுமதி பெறாமலே வைத்துள்ளனர். இதை மாநகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. அரசியல் கட்சியினருக்கு மாநகராட்சி நிர்வாகம், கரிசனம் காட்டுவதே இதற்கு காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:
பேனர் வைக்கும் போது முறையாக மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டும். பேனர் வைக்க காலக்கெடுவும் விதிக்கப்படும். பேனர் அளவு, அனுமதி கடிதம், கட்டண தொகை உள்ளிட்ட விபரங்களையும் பேனரில் அச்சிட வேண்டும். இந்த பேனர் முறையாக அனுமதி பெறாமல் வைத்துள்ளனர். இவ்வாறான செயல்களால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பேனர் விவகாரத்தில் அரசியல் தலையீட்டை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.