/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாய கடனை ரத்து செய்யும் கட்சியுடன் கூட்டணி; உ.உ.கட்சி செல்லமுத்து பேட்டி

ADDED : டிச 28, 2025 09:14 AM
நம்பியூர்: உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் கட்சி சார்பில், ஈரோடு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நம்பியூரில் நேற்று நடந்தது. இதில் உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து சிறப்புரையாற்றினார். பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக விவசாயிகள், மத்திய மற்றும் மாநில அரசிடம் எதிர்பார்ப்பது, விவசாய தொழிலுக்காக கூட்டுறவு வங்கி, தேசிய வங்கி மற்றும் டிராக்டர் கடன் போன்ற விவசாய தொழிலுக்கு பெற்ற அனைத்து கடன்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான். இது ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கை. இதுகுறித்து ஈரோடு வரும் மத்திய வேளாண்மை துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தவுள்ளோம். தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம், முழுமையாக கடன் ரத்து தேர்தலில் வரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளோம்.
இன்று நடந்த கூட்டத்திலும், விவசாய கடன் ரத்து மற்றும் விளைபொருளுக்கு விலை நிர்ணயம் என்ற இரு கோரிக்கைதான், மிகவும் வலியுறுத்தப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில், யார் விவசாய கடனை முழுவதுமாக ரத்து செய்வதாக அறிவிக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம். இவ்வாறு கூறினார்.