sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் துவக்கம்: இன்றும் 2,379 இடங்களில் நடத்த ஏற்பாடு

/

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் துவக்கம்: இன்றும் 2,379 இடங்களில் நடத்த ஏற்பாடு

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் துவக்கம்: இன்றும் 2,379 இடங்களில் நடத்த ஏற்பாடு

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் துவக்கம்: இன்றும் 2,379 இடங்களில் நடத்த ஏற்பாடு


ADDED : டிச 28, 2025 09:15 AM

Google News

ADDED : டிச 28, 2025 09:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: எஸ்.ஐ.ஆர்., பணியில், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் ஆவணங்களுடன் ஒத்துப்போகாத நபர்களை இணைக்கவும், புதிய வாக்காளர் சேர்க்க சிறப்பு முகாம் நேற்று துவங்கியது.ஈரோடு மாவட்டத்தில் கடந்த நவ., 4க்கு முன்பு, 19 லட்சத்து, 97,189 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர்., படிவம் பெறப்பட்டு கடந்த, 19 ல் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 16 லட்சத்து, 71,760 வாக்காளர்கள் உள்ளனர். 3 லட்சத்து, 25,429 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

46,440 வாக்காளர்களின் விபரங்கள் கடந்த, 2002 வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகாததால், அவர்களுக்கு படிவம்6 வழங்கி இணைக்க சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. ஈரோடு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் முகாமை ஆய்வு செய்த கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:

முன்பிருந்த வாக்காளர் பட்டியலில் ஒத்துப்போகாத, 46,440 வாக்காளர்களுக்கு, அறிவிப்பு படிவம் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான சிறப்பு முகாம் இன்று (நேற்று), நாளை (இன்று), 2,379 ஓட்டுச்சாவடிகளிலும் நடக்க உள்ளது. இத்துடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்படும் எதிர்ப்பு மற்றும் கோரிக்கை மனுக்கள் ஆய்வு செய்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தவிர ஜன.,1 ல் 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்கும் பணியும் நடக்கிறது. பிற இடங்களில் இருந்து குடி பெயர்ந்து வந்தோர், வாக்காளர் பட்டியலின் பிழைகளை சரி செய்தல், தவறாக பட்டியலில் இடம் பெற்றோரை நீக்கும் படிவம் பெறும் பணியும் சிறப்பு முகாமில் நடக்கிறது. இவ்வாறு கூறினார்.

* ஈரோடு மாவட்டம் -பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, ௩,220 மூட்டைகளில், ௧.௫௦ லட்சம் கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 157.75 ரூபாய் முதல் 185.37 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 25.89 ரூபாய் முதல் 178.89 ரூபாய் வரை, 2.45 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

* கோபி அருகே மொடச்சூரில், நேற்று கூடிய வாரச்சந்தையில், துவரம் பருப்பு (கிலோ) 110 ரூபாய்க்கும், குண்டு உளுந்து, 120, பச்சைபயிர், 135, பாசிப்பருப்பு, 140, கொள்ளு, 70, தட்டைப்பயிர், 110, மல்லி, 180, சீரகம், 300, வெந்தயம், 100, பொட்டுக்கடலை, 110, கருப்பு சுண்டல், 90, வெள்ளை

சுண்டல், 100, மிளகு, 800, புளி, 180, வரமிளகாய், 200, பூண்டு, 80 முதல், 240 ரூபாய் வரைக்கும் விற்பனையானது. இந்த வாரமும் பருப்பு வியாபாரம் மந்தமாகவே இருந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 28 மூட்டை வந்தது. ஒரு கிலோ, 132.32 ரூபாய் முதல் 191 ரூபாய் வரை, 13.78 குவிண்டால், 2.41 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் தேங்காய் ஏலத்துக்கு, 3,500 காய் வரத்தானது. ஒரு கிலோ, 55 ரூபாய் முதல் 61 ரூபாய் வரை, 13.92 குவிண்டால் தேங்காய், 84 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் தேங்காய் தொட்டி ஒரு கிலோ அதிகபட்சம், 27.58 ரூபாய்க்கு ஏலம் போனது.

* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 1,158 மூட்டை எள் வரத்தானது. சிவப்பு ரகம் கிலோ, 87.09 12௭ ரூபாய், வெள்ளை ரகம், 96.62 119.29 ரூபாய் என, 86,645 கிலோ எள், 96 லட்சத்து, 63,710 ரூபாய்க்கு விற்பனையானது.

* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 10,603 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ பச்சை தேங்காய், 44.39 51.49 ரூபாய், கசங்கல் தேங்காய், 52.49 60.99 ரூபாய் என, 3,997 கிலோ தேங்காய், 2 லட்சத்து, 11,881 ரூபாய்க்கு விலை போனது.* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 3,800 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை நாட்டு சர்க்கரை,

1,220 1,450 ரூபாய்; உருண்டை வெல்லம், 4,100 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,360 1,480 ரூபாய்; அச்சு வெல்லம், 310 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,450 1,500 ரூபாய்க்கு விலை போனது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் விலையில் மாற்றமில்லை.* கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை, 2,805 ரூபாய் முதல் 2,910 ரூபாய்க்கு விற்பனையானது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,640 ரூபாய் முதல், 2,700 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 5,527 நாட்டு சர்க்கரை மூட்டைகளை, 1.49 கோடி ரூபாய்க்கு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us