/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மத்திய அரசு திட்டத்தில் இலவச காஸ் வழங்கல்
/
மத்திய அரசு திட்டத்தில் இலவச காஸ் வழங்கல்
ADDED : டிச 28, 2025 09:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில், இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி, தாராபுரத்தை அடுத்த பகவான் கோயிலில் நேற்று நடந்தது.
மூலனுார் தெற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் செல்வராஜ் தலைமையில், மாவட்ட பொது செயலாளர் சுகுமார், உஜ்வாலா திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கினார். திருப்பூர் மாவட்ட தலைவர் மோகனப்பிரியா, பயனாளிகளுக்கு சிலிண்டர் இணைப்புடன் இலவசமாக காஸ் அடுப்புகளை வழங்கினார்.

