/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் சுகாதார நிலையத்துக்கு கேடயம்
/
அந்தியூர் சுகாதார நிலையத்துக்கு கேடயம்
ADDED : டிச 28, 2025 09:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 14 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில், அதிகப்படியான மற்றும் பாதுகாப்பான பிரசவ சேவைகளை திறம்பட மேற்கொண்டதற்கான செயல் திறன் மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதில் அந்தியூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சிறந்த பணிக்கான சுழற்கேடயத்தை, அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணனிடம், கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

