/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசுப் பள்ளி பராமரிப்புக்கு ரூ.52 லட்சம் நிதி ஒதுக்கீடு
/
அரசுப் பள்ளி பராமரிப்புக்கு ரூ.52 லட்சம் நிதி ஒதுக்கீடு
அரசுப் பள்ளி பராமரிப்புக்கு ரூ.52 லட்சம் நிதி ஒதுக்கீடு
அரசுப் பள்ளி பராமரிப்புக்கு ரூ.52 லட்சம் நிதி ஒதுக்கீடு
ADDED : மார் 08, 2024 07:21 AM
காங்கேயம்: காங்கேயம் நகராட்சி கூட்டம், தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் கனிராஜ், துணைத்தலைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர்.
காங்கேயம் நகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில், பள்ளி மேம்பாட்டு மானிய திட்டத்தில், 52 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பாரதியார் வீதி நடுநிலைப்பள்ளியில், 12 லட்சம் ரூபாய்; தொட்டியபட்டி ஆரம்ப பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பிடம் கட்டும் பணிக்கு, 10 லட்சம் ரூபாய்; பழையகோட்டை சாலை நடுநிலைப்பள்ளியில், 9 லட்சம் ரூபாய்; அகிலாண்டபுரம் ஆரம்பப்பள்ளியில், 2.40 லட்சம் ரூபாய்; களிமேடு ஆரம்பப்பள்ளியில் கழிப்பிடம் கட்ட, 10 லட்சம் ரூபாய்; அகஸ்திலிங்கம்பாளையம் ஆரம்பப்பள்ளியில், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். இதில்லாமல் குடிநீர் குழாய் அமைப்பது உள்பட, 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

