/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமைச்சர் முன்னிலையில் மாற்று கட்சியினர் ஐக்கியம்
/
அமைச்சர் முன்னிலையில் மாற்று கட்சியினர் ஐக்கியம்
ADDED : நவ 15, 2025 03:13 AM
காங்கேயம்:மாற்றுக்கட்சியில் இருந்து விலகிய நுாற்றுக்கும் மேற்பட்டோர், துணை பொது செயலாளரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி-துறை அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில், தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி காங்கேயத்தில் நேற்று நடந்தது.
நகர தி.மு.க., செயலாளர்
சேமலைப்பன் தலைமை வகித்தார். அ.தி.மு.க., -பா.ஜ., உள்-ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் இணைந்தனர்.நிகழ்வில் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்ம-நாபன் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஈஸ்வரசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் சூரியபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

