ADDED : மே 12, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த பெரிய கொடிவேரி அரசு உதவி பெறும் புனித சவேரியார் மேல்நிலை பள்ளியில், முன்னாள் மாணவர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில், 1996ல் படித்த மாண-வர்கள் சந்தித்துக் கொண்டனர்.
முன்னாள் ஆசிரியர்களிடம் ஆசி பெற்றும், இறந்த ஆசிரியருக்கு நினைவஞ்சலியும் செலுத்தினர். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டு போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்-கப்பட்டது. 29 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் தங்களது பழைய நினைவு-களை பகிர்ந்து கொண்டனர்.