/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இருவரை கத்தியால் வெட்டி அட்டூழியம் ஆம்புலன்ஸ் டிரைவர் போதையில் வெறி
/
இருவரை கத்தியால் வெட்டி அட்டூழியம் ஆம்புலன்ஸ் டிரைவர் போதையில் வெறி
இருவரை கத்தியால் வெட்டி அட்டூழியம் ஆம்புலன்ஸ் டிரைவர் போதையில் வெறி
இருவரை கத்தியால் வெட்டி அட்டூழியம் ஆம்புலன்ஸ் டிரைவர் போதையில் வெறி
ADDED : நவ 25, 2025 01:20 AM
ஈரோடு,ஈரோடு நாடார்மேட்டை சேர்ந்த முருகேசன் மகன் பூபதி, 26, ஆம்புலன்ஸ் டிரைவர். ஈரோடு ஜி.ஹெச்., முன் ஆம்புலன்சை நிறுத்தி வாடகைக்கு செல்வது வழக்கம். அரசு மருத்துவமனையில் சி.டி., ஸ்கேன் எடுக்கும் பகுதிக்கு மதுபோதையில் பூபதி நேற்று காலை சென்றுள்ளார். அங்கு ஸ்கேன் எடுக்க நின்றிருந்த சேலம் மாவட்டம் மொத்தம்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி பெருமாள், 37, என்பவருடன் தகராறில் ஈடுபட்டு, தகாத வார்த்தையில் பேசியுள்ளார். ஈரோடு-பூந்துறை சாலையில் பெருமாள் வசிக்கிறார்.
அப்போது பூபதி மறைத்து வைத்திருந்த கத்தியால் பெருமாளின் நெஞ்சு, வலது கை புஜம், இடது தோள்பட்டையில் சரமாரியாக குத்தியுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள், நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பூபதி அங்கிருந்து சென்று விட்டார். ரத்த காயங்களுடன் பெருமாள், ஈரோடு அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்தார்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்கு பின், ஈரோடு சவிதா சிக்னலில், சிவகிரி அம்மன் கோவில் பகுதிக்கு செல்லும் அரசு டவுன் பஸ் எண்-38 வந்தது. அதில் பூபதி ஏறினார். பஸ்சில் ஒரு இருக்கையில் ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி, 67, அமர்ந்திருந்தார். அவரது அருகில் பூபதி அமர்ந்தார்.
சிறிது துாரம் சென்ற நிலையில் பழனிச்சாமி தோளில் சாய்ந்து, அவரது முகத்தில் வாயால் ஊதியபடி சென்றுள்ளார். இதை பழனிச்சாமி கண்டித்தபோது, கத்தியால் வெட்ட முயற்சித்துள்ளார். தடுத்ததால் பழனிச்சாமி நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், பூபதியை பிடித்து கரூர் பைபாஸ் ரோடு பிரிவில் பஸ்சில் இருந்து இறக்கினர். அவன் கைகளை துண்டால் கட்டி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஈரோடு தாலுகா போலீசார் பூபதியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பூபதி மீது அடிதடி, திருட்டு வழக்குகள் உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் போலீசார் தெரிவித்தனர்.

