ADDED : மே 09, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் : திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே புதுப்பையை சேர்ந்தவர் மலையப்பன், 64, இவரது மனைவி முத்துமணி, 57.
இருவரும் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் எக்ஸ்.,எல் மொபட்டில் கரட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் ரோட்டின் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் தம்பதியர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்தனர். இருவரையும் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்துமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேல்சிகிச்சைக்காக மலையப்பன் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.