ADDED : மார் 03, 2025 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் அருகே இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி சென்ற அர்ஜூனன், 24, விக்னேஷ், 30, நிலைதடுமாறி சாலையில் விழுந்து காயமடைந்தனர். இதில் விக்னேஷை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு, 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனத்தில் அர்ஜூனன் அழைத்து செல்லப்பட்டார்.
காங்கேயம்-கோவை சாலையில் கவுண்டம்பாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் வாகனம், சாலை நடுவில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் சுகுமார், 29, உதவியாளர் வேல்முருகன், 27, மற்றும் அர்ஜூனன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.