/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊதிய உயர்வு கேட்கும் அம்மா உணவக ஊழியர்
/
ஊதிய உயர்வு கேட்கும் அம்மா உணவக ஊழியர்
ADDED : ஜூலை 04, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், ஆணையர் அர்பித் ஜெயினை, அம்மா உணவக ஊழியர்கள் நேற்று சந்தித்தனர். கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுகிறோம். தற்போது, 325 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.
ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் தெரிவித்தார். மாவட்டத்தில், 15 அம்மா உணவகம் செயல்படுகிறது. இதில் மாநகராட்சியில், ௧1 உணவகத்தில், 108 பேர்; சத்தி, கோபி, பு.புளியம்பட்டி, பவானி நகராட்சியில், நான்கு உணவகங்களில், 48 பேரும் பணிபுரிகின்றனர்.