/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அம்மன் தேர்த்திருவிழா 26ல் பூச்சாட்டுதலுடன் துவக்கம்
/
அம்மன் தேர்த்திருவிழா 26ல் பூச்சாட்டுதலுடன் துவக்கம்
அம்மன் தேர்த்திருவிழா 26ல் பூச்சாட்டுதலுடன் துவக்கம்
அம்மன் தேர்த்திருவிழா 26ல் பூச்சாட்டுதலுடன் துவக்கம்
ADDED : நவ 21, 2024 01:35 AM
அம்மன் தேர்த்திருவிழா 26ல் பூச்சாட்டுதலுடன் துவக்கம்
ஈரோடு, நவ. 21-
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு நடப்பாண்டுக்கான குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வரும், 26 காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் கோ பூஜை செய்யப்பட்டு, அன்றைய தினம் இரவு 8:00 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்க உள்ளது. வரும், 28 இரவு, 8:00 மணிக்கு இரண்டு கோவில்களிலும் கம்பம் நடும் நிகழ்ச்சி, பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் டிச., 8ம் தேதி நடக்கிறது, தொடர்ந்து தேர்வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 9 காலை, 7:00 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதலும், அன்று மாலை, 6:00 மணிக்கு கோவில் கரகம் எடுத்தலும், 10 காலை கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் விழா, இரவு மாவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. 11 இரவு கம்பம் பிடுங்குதலும், 12ம் தேதி மஞ்சள் நீராட்டும், அம்மன் வீதி உலாவும் நடைபெற உள்ளது.