sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அத்தாணி அருகே மின் வேலியில் சிக்கி யானை பலி 80 வயது விவசாயி கைது; மின் இணைப்பு 'கட்'

/

அத்தாணி அருகே மின் வேலியில் சிக்கி யானை பலி 80 வயது விவசாயி கைது; மின் இணைப்பு 'கட்'

அத்தாணி அருகே மின் வேலியில் சிக்கி யானை பலி 80 வயது விவசாயி கைது; மின் இணைப்பு 'கட்'

அத்தாணி அருகே மின் வேலியில் சிக்கி யானை பலி 80 வயது விவசாயி கைது; மின் இணைப்பு 'கட்'


ADDED : பிப் 18, 2025 07:22 AM

Google News

ADDED : பிப் 18, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அத்தாணி அருகே, சட்ட விரோத மின்வேலியில் சிக்கி யானை பலியான சம்பவத்தில், விவசாயி கைது செய்யப்பட்டார். தோட்-டத்துக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அத்தாணி, காக்காச்சிகுட்டையை சேர்ந்தவர் சின்னச்சாமி, 80; பொன்னாச்சி அம்மன் கோவில் வனப்பகுதியை ஒட்டி வசிக்கிறார். இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். அப்பகுதியில் மூன்று மாதமாக அடிக்கடி யானைகள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வந்துள்-ளன. அந்தியூர் வனத்

துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்களும் அவ்-வப்போது யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், யானைகள் பயிர்களை சேதம் செய்வது தொடர்ந்தது. இதனால் சின்னச்சாமி தனது தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைத்துள்ளார்.

இந்நிலையில் கரும்பை சுவைக்க, வழக்கம்போல் நேற்று முன்-தினம் நள்ளிரவில் வந்த, 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, கம்பி வேலியை தும்பிக்கையால் பிடித்து இழுத்தபோது, மின்-சாரம் பாய்ந்து பலியாகி விட்டது. இதையறிந்த வனத்

துறையினர் நேற்று காலை அங்கு சென்றனர்.

மின்வாரிய அதிகா-ரிகளுக்கு தகவல் தெரிவிக்க, சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்தியதற்காக அவரது இணைப்புக்கான மின்சாரத்தை துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையறிந்து அப்ப-குதி விவசாயிகள் திரண்டனர். குற்றத்தை ஒப்புக்கொண்டு விவ-சாயி சரணடைந்த நிலையில், மின்சாரத்தை துண்டிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட வன அலுவலர் நாயுடு, ப்பக்-கூடல் போலீசார் விரைந்தனர். விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகள் வைத்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக வனத்துறை சார்பில் உறுதி தரப்பட்டது. அதேசமயம் சின்னச்சாமியை கைது செய்து, அவரது தோட்டத்துக்கான மின் இணைப்பையும் துண்டித்தனர்.






      Dinamalar
      Follow us