'70 வயது நிரம்பியோருக்கு கூடுதல் ஓய்வூதியம் தரணும்'
'70 வயது நிரம்பியோருக்கு கூடுதல் ஓய்வூதியம் தரணும்'
ADDED : ஆக 30, 2026 05:50 AM
ஈரோடு:தமிழ்நாடு
அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட
தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் ஈரோட்டில் நடந்தது.
மாவட்ட நிர்வாகிகள் சங்கரன், பிரசன்னா, சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு
தமிழக அரசு, 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மருத்துவப்படியாக மாதம், 1,000 ரூபாய் வழங்க வேண்டும். பென்ஷன்
தொகையில் தேசிய மருத்துவ காப்பீடு தொகை, 497 ரூபாய் பிடித்தம்
செய்யப்படும் நிலையில், கூடுதலாக, 147 ரூபாய் சேர்த்து பிடித்தம் செய்ய
வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அனைத்து
மருத்துவமனைகளிலும் அனைத்து நோய்களுக்கும் எவ்வித கட்டணம் இன்றி
காசில்லா மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
ஓய்வு பெற்ற போக்குவரத்து
கழக ஊழியர்கள், மின்வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய
ஓய்வூதியம் மற்றும் இதர நிலுவைத்தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க
வேண்டும் எனவும்தீர்மானம் நிறைவேற்றினர்.
